சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தில்  கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 6 நீதிபதிகளை,  நிரந்தர நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 75 நீதிபதிகளுக்கான இடங்களைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 58 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கூடுதலாக நீதிபதிகளாக பணியாற்றி வந்த 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

அதன்படி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வரும் வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகிய 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு  சட்டத்துறை இணைசெயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.