6காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர் புறக்கணிப்பு: குமாரசாமி ஆட்சி தப்புமா?

பெங்களூரு:

ர்நாடகாவில் காங்.ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கி உள்ளதால், குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

6காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தை புறக்கணித்து உள்ளதால்  குமாரசாமி ஆட்சி தப்புமா? என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வ ராக பதவி வகித்து வருகிறார். கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் 6ந்தேதி தொடங்கிய நிலையில், முதல்வர் குமாரசாமி இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரை சில அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்து உள்ளனர். இது கூட்டணி அரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஆபரேசன் தாமரை என்ற பெயரில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களுக்கு வலைவீசி வருகிறது.  பாஜகவின் பேரத்துக்கு ஏற்கனவே 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பணிந்து, ஆட்சிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், தற்போது சில அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமறைவாக உள்ளனர்.

இவர்கள் பாஜகவின் கைக்குள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சட்ட மன்றத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று எடியூரப்பா அமளியில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தனது தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா  அழைப்புவிடுத்தார். . இதில் அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொள்ள  வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் தினேஷ்குண்டுராவ் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், 5 எம்எல்ஏக்கள் வருகை தரவில்லை. அவர்களில், சிவாஜிநகர் தொகுதியின் ரோஷன் பெய்க், அனுமதி பெற்றுள்ளதாகவும் மற்ற 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில் சில அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு வாரிய தலைவர்கள் பதவி வழங்கப்பட்டு அவர்களை சமாதானப்படுதப்பட்டது. மாகி எம்.எல்.ஏ. பிரதாப் கௌடா பாட்டீல் வேர்ஹவுஸ் கார்ப்பரேஷனின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சட்டமன்றக் கூட்டங்களில் தொடர்ந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், தன்னை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சட்டமன்ற உறுப்பினர் உமேஷ் ஜாத்வாவை அவர் மாற்றினார். ஜாதவ் பாரதீய ஜனதா கட்சியுடன் (பிஜேபி) தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரைச்சூர் கிராமப்புற எம்.எல்.ஏ பசனாகுடு தால் இப்போது பழங்குடி நலன்புரி வாரியத்தின் தலைவர் ஆவார். ஹஸன் எம்.எல்.சி., எம்.ஏ. கோபாலசுவாமி இப்போது நீர்வழங்கல் துறை அமைச்சர் டி.கே.சிகுமார் பாராளுமன்ற செயலாளர் ஆவார்.

ஆனால், அவர்கள் 3 பேரும் தங்களுக்கு   அமைச்சரவை பதவியில் பதவியில் அமர்த்தப்ப டவில்லை என்பது குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடிய சட்டமன்றமும் பாஜகவின் அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இன்று குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில்,  6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சபைக்கு வராமல் புறக்கணித்து உள்ளனர். ஏற்கனவே 3 பேர் அதிருப்தி உள்ள நிலையில், சுமார் 9 பேர் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரண மாக முதல்வர் குமாரசாமி அதிர்ச்சிக்குள்ளானார்.

ஏற்கனவே மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது சில அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஜேடிஎஸ் கட்சிக்கு 118 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. ஆட்சி பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களே போதுமான நிலையில் 6 எம்எல்ஏக்கள் உள்பட மேலும் பலர்  பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தலைமேல் தொங்கும் கத்திபோல கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி நடை பெற்று வருகிறது.