டில்லி,

பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள  காந்திசிலை முன் போராட்டம் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

6 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த உறுப்பினருமான மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்து உள்ளார்.

தொடர் அமளியில் ஈடுபட்டதாக  லோக்சபா காங்கிரஸ் எம்.பி.,க்கள் 6 பேர் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

லோக்சபாவில் இன்று பூஜ்ய நேரத்தின் போது, போபர்ஸ் ஊழல் விவகாரத்தை பா.ஜ., எம்.பி.,க்கள் எழுப்பியதை கண்டித்து காங்., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதற்கு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த காங்., எம்.பி.,க்கள் பேப்பரை கிழித்து, தூக்கி எறிந்தனர். இதனையடுத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் ஜி.கோகாய், கே.சுரேஷ், அதிரஞ்சன் சவுத்ரி, ரஞ்சித் ரஞ்சன், சுஷ்மிதா தேவ், எம்.கே.ராவன் ஆகிய 6 பேரையும் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

சஸ்பெண்ட் செய்த 6 காங்., உறுப்பினர்களையும் அவையில் இருந்து வெளியேற்றும்படி, அவை காவலர்களுக்கு உத்தரவிட்ட அவர், அவையை சிறிது நேரம் ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாவது,

அமளியில் ஈடுபட்ட எம்பிகளுக்கு கடும் தண்டனை வழங்கியது பொருத்தமானதல்ல. சபாநாய கரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என்று கூறி உள்ளார்.