‘புஷ்பா’ படத்திற்கு ஆறு நிமிட அதிரடி சேஸிங் காட்சிக்கு ரூ.6 கோடி செலவு……!

--

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்நடிப்பில் உருவாகும் படம் ‘புஷ்பா’ .

‘புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் தயாராகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா ஒளிப்பதிவாளராகவும், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.ஏப்ரல் 8 அல்லு அசுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்நடிப்பில் உருவாகும் படம் ‘புஷ்பா’ .

‘புஷ்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் தயாராகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்ர்ஜுன் பிறந்த நாள் என்பதால், இந்தப் படத்தின் பெயருடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

செம்மர கடத்தல் பற்றிய சர்ச்சையான கதையை தான் இயக்குனர் சுகுமார் கையில் எடுத்துள்ளார்.இதன் ஷூட்டிங் முழுவதும் நல்லம்மா ஹில்ஸ் பகுதியில் படமாக்கப்பட இருக்கிறது.

இந்தப் படம் பற்றி தினமும் ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, இந்தப் படத்தின் 6 நிமிட சேஸிங் காட்சிக்காக படக்குழு 6 கோடி ரூபாயை செலவழிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

காட்டுக்குள் எடுக்கப்படும் இந்த சேஸிங் காட்சியை, இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்க உள்ளனர். ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன்ஸ், சில ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர்களுடன் இணைந்து இந்தக் காட்சியை அமைக்க உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.