சென்னை:

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில்  திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் உள்ளபடி, தமிழகம் முழுவதும் வாக்களிக்க தகுதி உள்ள வாக்காளர்கள்  5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் (ஏறக்குறைய 6 கோடி பேர்) என்பது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல், கடந்த மார்ச் 26-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது  வாக்காளர் துணைப் பட்டியலின் அடிப்படையில்  திருப்பப்பட்ட வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு  வெளியிட்டுள்ளார்.

வடசென்னையில் உள்ள மொத்த வாக்காளர்கள்  14 லட்சத்து 87 ஆயிரத்து 461 பேர் வ

ஆண்கள் : 7 லட்சத்து 28 ஆயிரத்து 679 

பெண்கள் : 7 லட்சத்து 58 ஆயிரத்து 326

மூன்றாம் பாலினத்தவர்: 456 

தென் சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து 73 ஆயிரத்து 315

ஆண்கள் : 9 லட்சத்து 79 ஆயிரத்து 480 

பெண்கள் : 9 லட்சத்து 93 ஆயிரத்து 446 

மூன்றாம் பாலினத்தவர்: 389

மத்திய சென்னையில் உள்ள மொத்த வாக்காளர்கள் 13 லட்சத்து 32 ஆயிரத்து 135.

ஆண்கள் : 6 லட்சத்து 60 ஆயிரத்து 447 

பெண்கள் : 6 லட்சத்து 71 ஆயிரத்து 334 

மூன்றாம் பாலினத்தவர்: 354

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில்,  9 லட்சத்து 61 ஆயிரத்து 864 ஆண்கள், 9 லட்சத்து 84 ஆயிரத்து 32 பெண்கள், 346 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 19 லட்சத்து 46 ஆயிரத்து 242 வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள்.

காஞ்சிபுரம் தொகுதியில்  மொத்தம்  16 லட்சத்து 43 ஆயிரத்து 656. பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். இவர்களில் 8 லட்சத்து 5 ஆயிரத்து 932 ஆண்கள், 8 லட்சத்து 37 ஆயிரத்து 551 பெண்கள், 173 மூன்றாம் பாலினத்தவர்.

சென்னை அருகே உள்ள  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22 லட்சத்து 53 ஆயிரத்து 41 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். இவர்களில்   11 லட்சத்து 22 ஆயிரத்து 731 ஆண்கள், 11 லட்சத்து 29 ஆயிரத்து 970 பெண்கள், 340 மூன்றாம் பாலினத்தவர்

சென்னையில் இடைத்தேர்தல் நடைபெறும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில், மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 609 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில்  1 லட்சத்து 44 ஆயிரத்து 866 ஆண்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 684 பெண்கள், 59 மூன்றாம் பாலினத்தவர் என தேர்தல்ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும்  மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள்.  வயது வாரியாக உள்ள வாக்காளர்களின் விவரம் வருமாறு:-

18 முதல் 19 வயது:- 12 லட்சத்து 12 ஆயிரத்து 550

20 முதல் 29 வயது:- 1 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 249

30 முதல் 39 வயது:- 1 கோடியே 39 லட்சத்து 44 ஆயிரத்து 994

40 முதல் 49 வயது:- 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 48

50 முதல் 59 வயது:- 96 லட்சத்து 16 ஆயிரத்து 909

60 முதல் 69 வயது:- 61 லட்சத்து 35 ஆயிரத்து 328

70 முதல் 79 வயது:- 30 லட்சத்து 50 ஆயிரத்து 173

80-க்கும் கூடுதலாக:- 10 லட்சத்து 7 ஆயிரத்து 507