தெலுங்கானாவில் மினிலாரி கார் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்தில் பலி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர விபத்தில்  6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் சங்கர் ரெட்டி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நாக்பூர் செல்வதற்காக கார் ஒன்று முத்தங்கி வெளிவட்டச் சுற்றுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை தொடர்ந்து கார் ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார்.

பலியானவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.