இத்தாலி : இரவு விடுதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலி, 12 பேர் காயம்

ன்கோனா, இத்தாலி

த்தாலி நாட்டின் அன்கோனா நகரில் இரவு விடுதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகி 12 பேர் காயமடைந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தாலி நகரில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று அன்கோனா ஆகும்.  இங்குள்ள இரவு விடுதியான புளூ லாண்டர்ன் கிளப்பில் நேற்று பிரபல இத்தாலிய ராப் பாடகர் சுபெரா எபஸ்தா இசை நிகழ்ச்சி நடந்தது.   இந்த இசை நிகழ்வைக் காண சுமார் 1000 பேர் திரண்டிருந்தனர்.   ஒரே பாட்டும் கும்மாளமுமாக விடுதி இருந்தது.

அப்போது திடீரென ஒரு பயங்கர வாடை ஒன்று வீசியதாக கூறப்படுகிறது.   அதை ஒட்டி அங்கிருந்த ஒரு வாலிபர் மயங்கி விழுந்ததாகவும் அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு தூக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.  இந்த செய்தி அந்த அரங்கில் பரவியதால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கிருந்து ஒரே நேரத்தில் அனைவரும் வெளியேற முயன்றுள்ளனர்.     அங்கிருந்த அபாய நேரத்தில் வெளியேறும் கதவு மூடப்பட்டிருந்தது.   அதனால் அங்கிருந்த காவலர்கள் மக்களை திரும்ப செல்லுமாறு அனுப்பி உள்ளனர்.    அப்போது ஏற்பட்ட நெரிசலில் பலர் சிக்கிக் கொண்டனர்.

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி வெளியேற்றி உள்ளனர்.    இது குறித்து தீயணைப்பு அதிகாரி “ஒரு அழுகிய வாடை திடீரென வீசியதால் மக்கள் பயந்து போய் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றுள்ளனர்.   அதனால் ஏற்பட்ட நெரிசலில் 6 பேர் மரணம் அடைந்துள்ளன்ர்.  12 பேர் காயமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி