Random image

உத்திரப் பிரதேசம் : ரசாயன ஆலை விபத்தில் ஆறு பேர் மரணம்

பிஜ்னோர்

த்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உத்திரப் பிர்தேச மாநிலத்தில் பிஜ்னோர் பகுதியில் ஒரு பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலை மைந்துள்ளது.   மோகித் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை என பெயரிடப்பட்ட இந்த தொழிற்சாலையில் கொதிகலன் பழுதாகி விட்ட்து.  அதை நேற்று பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பழுது பார்க்கும் பணி நடைபெறும் போது திடீரென அந்த கொதிகலன் வெடித்து விப்த்தி ஏற்பட்டுள்ளது.   பணி புரிந்துக்கொண்டிருந்த 6 ஊழியர்கள் விபத்து நடந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர்.    அதே வளாகத்தில் இருந்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த இந்த தொழிற்சாலை உரிமையாளர் தலைமறைவாகி உள்ளார்.  காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.