Random image

ஹரியானாவில் கார் மீது லாரி மோதியதில் 6 பேர் பலி

சண்டிகர்:
ஹரியானாவில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் இறந்தனர்.

ஹரியானா மாநிலம் ரேவாரி நெருஞ்சாலையில் இன்று லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்தும், இறந்தவர்களின் அடையாளம் காணும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

படம் உதவி ஏஎன்ஐ: நன்றி