திருவனந்தபுரம்,

டந்த ஆண்டு செட்பம்பர் மாதம் 30ந்தேதி வங்ககடலில் வீசிய ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்னாப்பின்ன மாகியது. அந்த சமயத்தில்  டலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரக்கணக்கான பேரில் 500க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களின் கதி என்ன என்றும் தெரியாத நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில் 6 குமரி மாவட்ட மீனவர்கள் அந்தமான் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஓகி புயலின் பாதிப்புக்கு வங்க கடலோர பகுதிகளான கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொல்லம் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய மாநில அரசுகளின் சரியான அறிவிப்பு இல்லாததால்,   இந்தப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் புயலில் சிக்கி காணாமல் போயினர்.

மீனவர்களை  மீட்கும் பணியில், மாநில அரசுகளுடன் இணைந்து, கடலோரக் காவல்படையும், கடற்படையும் ஈடுபட்டன. எனினும் மீனவர்களை மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுக்கவில்லை என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காணாமல் போனவர்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள்  400 பேர் இதுவரை மீட்கப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

இந்நிலையில்,. புயல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் மாயமான மீனவர்கள் நிச்சயம் கரை திரும்பி வருவார்கள் என அவர்களுடைய குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த மீனவர் புஷ்பராஜன் என்பவர்  கடலுக்கு மீன்பிடிக்க சென்று புயலில் சிக்கி மாயமானார்.

இந்நிலையில், நேற்று முன்தினம்ம புஷ்பராஜன் தனது குடும்பத்தினருடன் போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது,தன்னுடன் குமரி மாவட்டம் வள்ளவிளை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் உள்ளதாக புஷ்பராஜன் கூறியதாக அவரது குடும்பத்தினர் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதைத்தொடர்ந்து,  புஷ்பராஜனுடன் சேர்த்து, குமரி மாவட்ட மீனவர்களையும் மீட்கும்படி புஷ்பராஜன் குடும்பத்தினர்,   விழிஞ்ஞம் பகுதி பங்குத்தந்தையிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அவர் இதுகுறித்து கேரள அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதையடுத்து,  புஷ்பராஜனையும், குமரி மீனவர்களை யும் மீட்க நடவடிக்கை எடுக்க கேரள அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையேயில், புஷ்பராஜன் கூறிய குமரி மாவட்டம்  வள்ளவிளையை சேர்ந்த 6 மீனவர்கள்  குறித்து, அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் வந்ததா என விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.