கொரோனா பாதிப்பு அச்சமா : 6 நிமிட நடைப்பயிற்சி மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்

 

திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா குறித்தே பேச்சு, இதனால் நமக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்ச உணர்வு அனைவருக்குமே இருக்கிறது.

காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு எனும் அறிகுறி உள்ளவர்கள் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வதே சிறந்த வழி என்ற போதும், கொரோனா தாக்கம் இருக்குமோ என்ற உணர்வை போக்க நாமே சில சுய பரிசோதனைகளை செய்து பார்க்கலாம்.

6 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்டு இதனை நாம் தெரிந்துகொள்ளலாம், நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் நம் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும் 94 சதத்திற்கும் மேல் இருக்கும் பட்சத்தில், நடை பயிற்சியை செய்துபார்க்கலாம்.

எப்பொழுதும் போல் சாதாரணமாக 6 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்ட பின் மீண்டும் ஒருமுறை உங்கள் ஆக்சிஜன் அளவை பரிசோதித்து பார்க்கும் போது 3 விழுக்காடுக்கு மேல் அதாவது 89 க்கும் கீழ் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

94 சதம் என்று அதே நிலையில் இருந்தால் அச்சம் கொள்ள தேவையில்லை, ஒன்று முதல் மூன்று சதம் குறைந்திருந்தால் கவனமாக இருப்பது நல்லது.

இந்த பரிசோதனையை நல்ல நிலையில், நான்றாக எந்த துணையும் இல்லாமல் நடக்கக்கூடியவர்கள் மட்டுமே மேற்கொள்ளவேண்டும்.

நல்ல நிலையில் நடக்க கூடிய முதியவர்கள் 3 நிமிடம் வரை நடந்தால் போதுமானது.

இந்த 6 நிமிட நடைபயிற்சி கொரோனா குறித்த தேவையற்ற அச்சத்தை போக்க உதவும்.

நன்றி : டைம்ஸ் நவ் நியூஸ்