ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 6 மாத குழந்தை மரணம்! பரபரப்பு

சென்னை:

ஸ்திரேலியாவில் இருந்து சென்னை விமானத்தில் பெற்றோருடன் வந்த 6 மாத குழந்தை திடீரென மரணம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவர் பணி நிமித்தமாக ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்கள். இவர்கள் நேற்று மெல்போர்ன் நகரிலிருந்து  விமானம் மூலம் சென்னை வந்தனர்.

விமானம் டெல்லி வந்ததும் வழக்கமான சோதனைகள் முடிந்து வெளியே வந்தபோது குழந்தை அசைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தன நிலையில், விமான நிலையத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர்.

ஆனால்,  குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் சக்தி முருகன் குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் ஆக்ஸிஜன் பிரச்னையால் குழந்தை மூச்சுவிட முடியாமல் உயரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கூறிய முருகனின் மனைவி தீபா,  விமானத்தில் ஏறிய போது குழந்தை ஹிருத்திக் நலமாக இருந்ததாக தெரிவித்து உள்ளார்.