நடிகர் ஜெய் கார் ஓட்ட 6 மாதம் தடை! கோர்ட்டு அதிரடி

சென்னை,

து போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக  நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில், நடிகர் ஜெய்க்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. அதையடுத்து இன்று காலை  நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  சரணடைந்தார்.

நடிகர் ஜெய் கடந்த மாதம்  21ம் தேதி பார்ட்டியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது, அடையாறு அருகே அவரது கார் பிளாட்பாரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பான  வழக்கில் ஆஜராகமால் ஜெய் தவிர்த்து வந்தார்.

இதன் காரணமாக அவரை இரண்டு நாட்களுக்குள் கைது செய்து ஆஜர் செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதன் காரணமாக இன்று காலை நடிகர் ஜெய் தனது வழக்கறிஞருடன் வந்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் நீதிபதி, நடிகர் ஜெய்யை கடுமையாக எச்சரித்தார். சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று கண்டித்தார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகவும், வாகனத்திற்கு காப்பீடு இல்லை எனவும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நடிகர் ஜெய்க்கு ரூ.5200 அபராதமும், 6 மாதம் வாகனம் ஓட்ட தடை செய்தும் சைதாப்பேட்டை நீதிமன்றம்உ த்தரவிட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி