டில்லி:

வயது முதிர்ந்த பெற்றோரின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தயாரித்துள்ளது. இதில் தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள், மருமகன், பேரன் போன்றவர்களும் மூத்த பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்ற சரத்து சேர்க்கப்பட்டுள்ளது.

 

மேலும், பராமரிப்புக்கென அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகையான 10 ஆயிரம் ரூபாய் என்ற கட்டுப்பாட்டை நீக்கி, அதிகம் சம்பாதிக்கும் பிள்ளைகள் அதற்கேற்ப பராமரிப்பு தொகை வழங்க வேண்டும். வயது முதிர்ந்த பெற்றோரை கைவிடுவோருக்கு 3 மாத சிறை தண்டனை என்பது 6 மாத கால சிறைத் தண்டனையாக உயர்த்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.