பெரியளவில் மாறும் இந்திய டெஸ்ட் அணி – மாற்றாக உள்ளே வரும் அந்த 6 வீரர்கள் யார்?

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அணிக்குள் புதிதாக 6 பேர் வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

விராத் கோலி முதல் போட்டியுடன் நாடு திரும்புவதால், அவர் இடத்தில் கேஎல் ராகுல் வருகிறார். மோசமாக ஆடிய துவக்க வீரர் பிரித்விஷா நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ரோகித் ஷர்மா வருகிறார்.

சரியாக செயல்படாத இரண்டாம் நிலை வீரர் மயங்க் அகர்வாலும் நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக ஷப்மன் கில் உள்ளே வருகிறார் என்று கூறப்படுகிறது.

அனுமன் விஹாரி நீக்கப்பட்டு, ஜடேஜா உள்ளே வருகிறார். முகமது ஷமிக்கு பதிலாக ஷிராஜ் களமிறக்கப்படுகிறார். விக்கெட் கீப்பர் சஹா நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட் சேர்க்கப்படுகிறார்.

மொத்தமாக, அடுத்தப் போட்டிக்கான இந்திய அணி, ரோஹித் சர்மா, கே. எல் ராகுல், புஜாரா, ரஹானே, சுப்மான் கில், பண்ட், ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், பும்ரா, சிராஜ் ஆகியோரைக் கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.