மக்கள் நீதி மய்யத்தில் 6 புதிய பொதுச் செயலாளர்கள் நியமனம்! கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை:

க்கள் நீதி மய்யம் கட்சிக்கு  புதிதாக 6 பொதுச் செயலாளர்களை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நியமனம் செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை புதிதாக கட்டமைக்கும் நோக்கில் மாற்றங்கள் செய்துள்ளதாக அறிவித்துள்ள கமல்ஹாசன், புதியதாக 6 பொதுச்செயலாளர்களையும் நியமனம் செய்துள்ளார்.

இதுகுறித்து  மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தலைவரின் கீழ் துணைத் தலைவர், 6 பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் என விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் (ஒருங்கிணைப்பு) – விக்கு அருணாச்சலம்,

பொதுச்செயலாளர் (அமைப்பு – வடக்கு கிழக்கு) – ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா,

பொதுச்செயலாளர் (தெற்கு-மேற்கு ) – தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில்

பொதுச்செயலாளர் (கொள்கை பரப்பு பதவி) ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி  ரங்கராஜன்,

பொதுச்செயலாளர் (சார்பு அணிகள்)  –  உமா தேவி

பொதுச் செயலாளர் (தலைவர் அலுவலகம்) –  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி  பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மண்டலங்கள் உருவாக்கப்படுவ தாகவும், அவற்றிற்கு அதே மாவட்டத்தை சேர்ந்த 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

MNM-Party-Structure-14082019

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 6 new general secretaries, Kamal Haasan, MNM party
-=-