சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதிகள் பதவி ஏற்றனர்!

--

சென்னை,

சென்னை உயர்நீதி மன்றத்தில் புதிய நியமனம் செய்யப்பட்டுள்ள 6 நீதிபதிகளும் இன்று காலை பதவி ஏற்றனர்.

புதிய நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 6 புதிய நீதிபதிகளாக  அப்துல் குத்தாஸ், தண்டபாணி, ஆதிகேசவலு, பவானி சுப்பராயன், ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சாமிநாதன் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து புதிய நீதிபதிகளின் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.