35ஆக உயர்வு: தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை:

ந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று, தமிழகத்திலும் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளது.  தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலை யில்,பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் ஊரடங்கை மதிக்காமல் வெளியிலேயே சுற்றித்திரிகின்றனர். அரசு மற்றும் காவல்துறையினரின் எச்சரிக்கையை உதாசினப்படுத்தி வருவதால், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

நேற்றுவரை 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 6 பேர் கொரோனாவிடம் சிக்கியுள்ளது உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் சென்னை, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 2 பேருக்கும், சென்னையில் 2 பேருக்கும், மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் மூலமாக அவருடைய குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.