உத்தரபிரதேசம்: கண்புரை அறுவை சிகிச்சையில் 6 பேருக்கு பார்வை பறிபோனது

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தனியார் மருத்துவமனையில் 6 பேருக்கு கடந்த 12-ம் தேதி கண்புரை அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்த ஒரு சில மணி நேரங்களில் 6 பேருக்கும் பார்வை இழப்பு ஏற்பட்டது. பார்வை கிடைக்க விரைவில் சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் உறுதியளித்தனர். 3 நாட்கள் ஆகியும் பார்வை கிடைக்கவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சப் கலெக்டர் விரேந்திர பிரசாத் பாண்டே சமரசம் செய்தார். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார். இதன் பின்னர் போராட்டத்தை கைவிட்ட திரும்பிச் சென்றனர்.