அரசு விதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்த ஆறு பேர் கைது

ரசு விதித்த நேரக்கட்டுப்பாட்டை மீறு பட்டாசு வெடித்ததாக நெல்லையில் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகக் கூறி, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது.

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அந்த நேரத்தை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் எனறும் கூறியது.

இதை மீறுபவர்கள் மீது இ.பி.கோ. 188 பிரிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, தமிழ்நாடு அரசு காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.  மற்ற நேரங்களில் வெடிப்பவர் மீது உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி இ.பி.கோ. 188 பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என்றும், இந்த பிரிவின் கீழ் ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உண்டு என்றும் எச்சரித்தது.

இந்த நிலையில் “உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்ற முடியாது” என்று பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் பலர் இப்படி தெரிவித்தனர்.

இந்த நிலையில்  நெல்லையில் அரசு விதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.