கடன் தொல்லை: கர்நாடகாவில் விவசாயி குடும்பத்தினர் 6 பேர் தற்கொலை

பெங்களூரு:

டன் தொல்லை காரணமாக ஒரே விவசாயி  குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தில் உள்ளது மேதகல் கிராமம். இங்குள்ள விவசாயி  சேகரய்யா. இவர் விவசாயம் செய்வதற்காக வங்கிகளில்  கடன் வாங்கியுள்ளார்.

ஆனால், எதிர்பார்த்த விளைச்சல் இல்லாத நிலையில் அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் இவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் விவசாயிக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி  சேகரய்யா குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு  தனது மனைவி மற்றும் 4 மகள்களுக்கு விஷம் கொடுத்துள் ளார்.  அதைக்குடித்த  அவர்கள் இறந்தவுடன், விவசாயி  சேகரய்யாவும் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் காலையில்தான் அருகே உள்ளவர்களுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்ததில் அனைவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.