இன்று ஒரே ராசியில் இணையும் 6 கிரகங்கள் …! பீதியில் மக்கள்… கோவில்களில் தஞ்சம்….

ன்று ஒரே ராசியில்  6 கிரகங்கள் இணையும் நிகழ்வு நடைபெறுகிறது.  இதுகுறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய வகையிலான தகவல்கள் பரவி வருவதால், பொதுமக்கள் கோவில்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த அரிய நிகழ்வு 537 வருடத்திற்கு பின் இன்று நடைபெறுகிறது.

சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் மற்றும் கேது ஆகிய 6 கிரகங்கள் தனுசு ராசியில் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்கள் (27-ந் தேதி வரை) ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெறுவதாக ஜோதிடர்க்ள் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ஒவ்வொரு ஜோதிடர்களும் ஒவ்வொரு வகையான கருத்துக்களை தெரிவித்து பொதுமக்களிடையே பீதியை கிளப்பி உள்ளனர். இதனால், 12 ராசிகளுக்கும்  பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே பரவி உள்ளது. இதையொட்டு, கோவில் குளங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர்.

இந்த கிரகங்களின் சேர்க்கை குறித்து கருத்துதெரிவித்துள்ள விஞ்ஞானிகள்,  இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கோள்கள் சூரியனை தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. அதேபோல் கோள்கள் இணைவதும் இயல்பான ஒன்று. இதனால் பூமியில் மாற்றம் ஏதும் ஏற்படாது என்று தெரிவித்து உள்ளனர்.

அதுபோல,  கோள்கள் இணைவதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதற்கு “அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை என்று சென்னை பிர்லா கோளரங்க நிர்வாகம் கூறியுள்ளது.

சில நேரங்களில் ஒரு கோள் மற்றொரு கோளை முந்தி செல்வதை போலவும், அருகருகே அமைந்திருப்பது போலவும் தோன்றும் என்றும், உண்மையில் அவற்றிற்கு இடையே பல கோடி கிலோ மீட்டர் தூரம் விலகி உள்ளன என்றும் கூறினார்.

இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜோதிடம் கூறுவது என்ன?

ஜோதிடப்படி இன்று நடைபெறும் நிகழ்வு  537 வருடத்திற்கு ஒருமுறை வரும் அரிய நிகழ்வு என கூறப்படுகிறது. அதாவது ராசியின் 9வது ராசியான வரும் தனுசு ராசியில் சனி, கேது, குரு, சூரியன், புதன், சந்திரன் ஆகிய ஆறு கிரகங்கள் சஞ்சாரம் நடக்க உள்ளது. இந்த நிகழ்வு டிசம்பர் 25ஆம் தேதி நடக்க உள்ளது.

குரு பகவான் அதிபதியாக திகழும் தனுசு ராசி என்பது நெருப்பு ராசி என்பர். இது காலபுருஷ தத்துவத்தில் 9வது இடத்தில் அமைவதால் முழு சுப ஸ்தானம் அதாவது முழு சுபரான புதன் பகவானின் மூல திரிகோண இடத்தில் வருவதால் இந்த ஸ்தானத்தில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. இதன் காரணமாக சிலருக்கு யோகமும், சிலருக்கு சிறு சிக்கலும் ஏற்படலாம்.

தனுசு ராசியில் அமர்வதால் தனுசு ராசிக்கு இதுவரை அனுபவித்த துன்பங்கள் விலகும். தனுசு ராசி, சிம்மம், மேஷம் ஆகிய ராசிகள் மிக அபரிதமான பலன்களைப் பெற உள்ளதாகவும் ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

கார்ட்டூன் கேலரி