சென்னை: திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான  ஒப்பந்தம் இன்று காலை திமுக தலைமை ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமை கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும்பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், விசிகவுக்கு 6 தொகுதிகளும், மதிமுகவுக்கு 6 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்டுக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்து வந்தது. இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கடைசியாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இதையடுத்து, திமுக – மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலைய  திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.