காஷ்மீர் : ஆறு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற அதிரடிப்படை

ம்மு

யங்கரவாதிகளுக்கு அதிரடிபடையினருக்கும் இடையில் நடந்ததுப்பாக்கி சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலம் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவப் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அடிக்கடி நிகழ்கிறது. இந்த பயங்கரவாதிகளுகு பாகிஸ்தான் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பயங்கரவாதிகள் குழு ஒன்று சோபியான் மாவட்டத்தில் பதுங்கி உள்ளதாக தகவல் ராணுவத்தினருக்கு கிடைத்துள்ளது.

அதை ஒட்டி பயங்கரவாதிகளை அழிக்க அதிரடிப்படையினர் அங்கு சென்றனர். அப்போது மறைந்திருந்து ராணுவத்தினரை பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி தாக்கினர். அதிரடிப்படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நிகழ்த்தினர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றிய ராணுவத்தினர் அங்கு மேலும் யாரேனும் பதுங்கி உள்ளனரா என சோதனை நடத்தி உள்ளனர். அங்கு பதுங்கி இருந்த இரு பயங்கரவாதிகல் திடீரென தாக்குதல் நடத்தவே பாதுகாப்புப் படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். இந்த சண்டையில் மொத்தம் 6 தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்.