ஐதராபாத்தில் மின்சாரம் தாக்கி இறந்த சென்னை சிறுவன்

ஐதராபாத்:

சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.


ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆராய்ந்தபோது, மஞ்சள் சட்டையணிந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் மின் கம்பத்தை தொட, மின்சாரம் தாக்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்து போகிறான்.

இறந்த சிறுவனின் தந்தை ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், சென்னையைச் சேர்ந்தவர். மகனின் உடலை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குடியிருப்புகளின் மின்சாரத்தை பராமரிக்கும் கோல்ட் ஸ்டார் என்ற நிறுவனத்தின் மீது, அலட்சியப் போக்குடன் செயல்பட்டதாகக் கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.