60சதங்கள்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி

டில்லி:

நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் சதம் அடித்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுவரை 60 சதங்களை நிறைவு செய்துள்ள விராட் கோலிக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகிள்ல 36 சதங்கள் அடித்துள்ள கோலி, டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்கள் அடித்து மொத்தம் 60 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை சிகரத்தை அடைய விராட் கோலிக்கு 58 டி20 போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 124 டெஸ்ட் போட்டிகள் என மொத்த  386 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது..

60 சதத்தை விராட் கோலி எட்டியுள்ளதன் காரணமாக, குறைந்த இன்னிங்சில்அதிக சதங்களை பதிவு செய்த வீரர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். ஏற்கனவே இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கர்  426 இன்னிங்சில் 60 சதம் அடித்து  முதலிடத்தில் இருந்து வந்தார். தற்போது அவரை கீழே தள்ளி விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணி கேப்டனான விராட கோலி கடந்த 2016ம் ஆடு 2595 ரன்களும், 2017ம் ஆண்டு 2818 ரன்களும், இந்த ஆண்டு (2018) இதுவரை 2098 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 5வது முறையாக ஒரே ஆண்டில் 2000 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.