நெல்லையில் 60 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்! 4 பேரிடம் விசாரணை

நெல்லை: திருநெல்வேலியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.60 லட்சம் ஹாவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நெல்லை கீழ ரத வீதியில் உள்ள ஒரு வீட்டில் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு  கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது,   அங்கிருந்து 60 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை காரில் எடுத்துச்செல்ல முயன்றனர். அதை தடுத்து கைப்பற்றிய காவல்துறையினர், இது தொடர்பாக, பட்டேல் சந்த்  உள்பட 4 பேரிம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் காரில் 60 லட்ச ரூபாய் பணத்துடன் வடமாநில வியாபாரிகள் இருவர் மற்றும் நெல்லையை சேர்ந்த இருவர் என நான்கு பேர்  காரில்  எடுத்துச்செல்ல முயன்றதாகவும்,  அவர்களிடம்  பணத்திற்கு சரியான ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிடிபட்ட 60 லட்ச ரூபாய் பணத்தை வருமான வரி துறை அதிகாரியிடம் ஒப்படைத்து விடுவோம். அவர்கைள்  சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று காவல்துறை யினர் தெரிவித்து உள்ளனர்.