இலங்கைக்கு கடத்த இருந்த 60 லட்சம் ரூபாய் கஞ்சா பறிமுதல்: ராமேஸ்வரத்தில் 3 பேர் கைது

ராமேஸ்வரம்:

லங்கைக்கு கடத்த இருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 304 கிலோ கஞ்சா பறிமுதல் ராமேஸ் வரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ராமேஸ்வரம் பகுதி கியூ பிராஞ்ச் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாலை சுமார் 3 மணி அளவில் சந்தேகத்திற்கிடமான சிலர் சீனியப்பா கடற்கரை பகுதியில் சுற்றி வந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்த போலீசார், கைது செய்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா கடத்துப வர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.

விசாரணையில் இந்த கஞ்சா மூட்டைகளை அவர்களை இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாக  சுந்தரமுடையான் சேர்ந்த முருகன், ஜெய்கணேஷ், கேதீஸ்வரன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கார்ட்டூன் கேலரி