மகாராஷ்டிரா பள்ளிக் கூட சமையலறையில் 60 பாம்புகள்

போகரா, மகாராஷ்டிரா

காராஷ்டிராவில் உள்ள போகரா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் சமையல் அறையில் 60 விஷப் பாம்புகள் இருந்துள்ளன

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் போக்ரா.  இந்த சிற்றூரில் ஒரு துவக்கப் பள்ளி உள்ளது.   நேற்று காலை இங்கு பணி புரியும் சமையல் காரப் பெண்மணி சமையலறைக்கு சென்றுள்ளார்.   அப்போது அங்கு இரண்டு கட்டு விரியன் பாம்புகள் அங்கு இருந்துள்ளன.

அதிர்ச்சி அடைந்த பெண்மணி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்குள் இருந்து மேலும் சில பாம்புகள் வெளியே வர ஆரம்பித்தன.   அந்தப் பெண் பதறியபடி வெளியே ஓடி உள்ளார்.   இந்த செய்தி பரவவே அந்த போகரா சிற்றூரே பீதி அடைந்தது.

பாம்பு பிடிக்கும் நிபுணர்களும் வனத்துறையினரு அங்கு அழைக்கப்பட்டனர்.  அவர்கள் வந்து பல மணி நேரம் முயன்ற பின் சமையல் அறையில் இருந்த பாம்புகள் பிடிக்கப்பட்டன.   அவை அனைத்தும் கடுமையான விஷமுள்ள பாம்புகள் எனவும் மொத்தம் 60 பாம்புகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed