தாயின் அனுமதியோடு 10 வயது சிறுமிக்கு திரையரங்கில் நேர்ந்த கொடூரம்


லப்புரம், கேரளா

திரையரங்கு ஒன்றில் தாயின் கண்முன்னே 60 வயது தொழிலதிபர் 10 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த சம்பவம் நடந்து  தொழிலதிபரும் சிறுமியின் தாயும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் எடப்பாலில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒரு கண்காணிப்பு காமிரா பதிவுக் காட்சியை ஒப்படைத்தார். அதில் திரையரங்கு ஒன்றில் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே 60 வயதுள்ள முகைதீன் குட்டி என்பவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துகொண்டிருந்ததும். இதை அருகில் இருந்த சிறுமியின் தாய் கண்டும் காணாமல் இருந்ததும் பதிவாகி இருந்தது.

ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து உடனடியாக விசாரிக்காமல் அமைதியாக இருந்தனர்.   அ ப்படி இருந்தும் இந்தப் பிரச்னை மெல்ல வெளியில் கசிந்தது.  அதை அடுத்து நேற்று முன்தினம் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த முகைதீன் குட்டி கைது செய்யப்பட்டார். அத்துடன் முகைதீன் குட்டிக்கு உடந்தையாகச் செயல்பட்ட சிறுமியின் தாயும் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதை அடுத்து துரித நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப்படுத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் பேபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “திரை அரங்கில் அந்த 10 வயது சிறுமி தாயுடன் நுழைந்திருக்கிறார்.   அதன் பிறகு சொகுசு காரில் வந்த முகைதீன் குட்டி சிறுமிக்கும், அவரது தாய்க்கும் நடுவில் இருந்த இருக்கையில் அமர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். முழு திரைப்படமும் முடியும் வரை தாயின் அனுமதியோடு இந்தக் கொடுமை நடந்திருக்கிறது.   இந்த வழக்கு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காத உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முகைதீன் குட்டியை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது அதனால் மேலும் பல தகவல்கள் வெளியே வரும்” என்றார்.
Pic courtesy : google