லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 1லட்சத்து 79ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில், நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியால் 600 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.  இந்தியாவைச் சேர்ந்த பல மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கொரானா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில், இந்திய தயாரிப்பான ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்துதான் கொரோனாவுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.  அமெரிக்கா உள்பட 50 நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின்  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அனைவரும் எளிதில் வாங்கக்கூடிய குறைந்த விலை மருந்து உற்பத்தியில் உலக முன்னணியில் உள்ளன என அமெரிக்கா உள்பட பல நாடுகள் தெரிவித்து உள்ளன.
ஏறகனவே, இந்தியாவின்  ஐசிஎம்ஆர் உள்ளிட்ட அறிவியல் ஆய்வுக் கழகங்கள், அமெரிக்க தேசிய சுகாதார கழகம் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு மையம் ஆகியவை கூட்டாக பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் 600க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுக்கூடங்களில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம் அடைந்துள்ளன. இது தொடர்பான தரவுகளை உலக சுகாதார அமைப்பும் அமெரிக்க தேசிய மருத்துவ நூலகமும் கண்காணித்து வருகின்றன.

தினம் தினம் புதிய கண்டுபிடிப்புகள் சிறிதளவுக்கு நம்பிக்கையை அளித்தாலும் இன்னும் ஆதாரப்பூர்வமான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நாளை ஒரு நோய் தடுப்பு மருந்து மனிதர்களிடம் சோதனை நடத்தப்பட உள்ளதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, இந்தியாவும் ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.