திரிபுராவில் அமைச்சரின் ஊழல் செய்தியை வெளியிட்ட பத்திரிகையின் 6 ஆயிரம் பிரதிகள்  கொளுத்தப்பட்டன.

திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

அந்த மாநில வேளாண்மைத் துறை அமைச்சகத்தில் 150 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக ‘’ பிரதிபாதி காலம்’’ என்ற பத்திரிகை கடந்த 3 நாட்களாகச் செய்தி வெளியிட்டு வந்தது.

இந்த நிலையில் கோமதி மாவட்டம் உதைப்பூர் என்ற இடத்தில் இருந்து வெளியூர்களுக்கு அந்த பத்திரிகையின் பிரதிகள் நேற்று காலையில் பேருந்துகள் மூலம் அனுப்பப்பட்டன.

வழியில் மர்ம கும்பம், ஒரு பேருந்தை வழி மறித்து அதில் இருந்த ‘பிரதிபாதி காலம்’’ பத்திரிகையின்  6 ஆயிரம் பிரதிகளை கீழே இறக்கி தீ வைத்துக் கொளுத்தியுள்ளது.

;;150 கோடி ரூபாய் ஊழல் குறித்து  வேளாண் அமைச்சர் பிரனஜித் ராய் உள்ளிட்ட சிலர் மீது சில நாட்களாகச் செய்தி வெளியிட்டு வந்தோம். இந்நிலையில் வெளியூர்களுக்கு விநியோகம் செய்யக் கொண்டு செல்லப்பட்ட பத்திரிகை பிரதிகள் எரிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்த அந்த பத்திரிகையின் ஆசிரியர் அனோல் ராய் சவுதாரி’’ குற்றவாளிகள் குறித்துப் பெயர் குறிப்பிட்டு புகார் அளித்தும் போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை’’ எனக் குற்றம் சாட்டினார்.

-பா.பாரதி.