டில்லி :

ந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் சுமார் 6000 பேர் சென்ற வருடம் வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்துள்ளார்கள் என உலக செல்வந்தர்கள் அமைப்பு தெரிவிக்கின்றது.

உலக செல்வந்தர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2016ஆம் ஆண்டு மட்டும் சுமார் 6000 கோடீஸ்வரர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று தங்களின் வாழ்விடத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.  இது 2015 ஆம் ஆண்டின் எண்ணிக்கையான 4000 ஐ போல 150% என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பல தொழில்கள் வளர்ச்சி அடைவதால் செல்வந்தர்களின் தொகை அதிகரித்து வருகிறது.  உள்நாட்டு நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், சுகாதாரத்துறை மீடியா ஆகிய துறைகள் மேலும் வளர்ச்சி பெறும் என அந்த அமைப்பு கூறுகிறது.  குறிப்பாக மருத்துவத்துறை மேலும் வளர்ச்சி பெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  ஐதராபாத், பெங்களூரு, பூனே போன்ற நகர்களின் தொழில் வளர்ச்சியையும், அதனால் செல்வந்தர்கள் எண்ணிக்கை உயர்ந்ததையும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.

இதே போல் மற்ற நாடுகளில் குடி பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  குறிப்பாக சீனா (9000) பிரேசில் (8000), துருக்கி (6000) ஆக உள்ளது.

அதே நேரத்தில் புதிதாக குடி வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நாடுகளும் உண்டு.  அவற்றில் ஆஸ்திரேலியா 11000 செல்வந்தர்கள் குடிபெயர்வுடன் முதலிடத்தை பிடிக்கிறது.  அமெரிக்கா (10000), கனடா(8000) பேர் வருகையால் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

அதிகம் பேர் ஆஸ்திரேலியாவை விரும்புவதற்கு அங்குள்ள சுகாதார வசதிகளும், அதன் இட அமைப்பும் முக்கிய காரணங்களாக உள்ளன.  ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிய நாடுகளான சீனா, ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர், வியட்நாம், இந்தியா போன்ற நாடுகளில் வர்த்தகம் செய்வது மிகவும் சுலபமான ஒன்று.

அதே நேரத்தில் ஐரோப்பிய நாடுகளைப் போல் புலம் புயர்ந்தோர் எண்ணிக்கை இந்த மூன்று நாடுகளில் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.