கன்னியாகுமரி மீனவர்கள் 601 பேர் கரை திரும்பவில்லை… கலெக்டர்

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் இன்று பார்வையிட்டார். அங்கு மீனவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட 32 ஆயிரம் மீனவர் குடும்பங்களுக்கு தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. 3 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உயிரிழந்த மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழ் 3 மாதங்களுக்குள் வழங்கப்படும்’’ என்றார்.