61-வது பழக்கண்காட்சி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தொடங்கியது 

ஊட்டி:

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர் பிரதேசங்களை நோக்கி ஓடும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களான ன ஊட்டி, கொடைக்காணலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த நிலையில் கடந்த  மே 17-ஆம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாள்களுக்கு மலர்க்காட்சி நிறைவு பெற்ற நிலையில், இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி தொடங்கி உள்ளது.

குன்னூரில் ஆண்டு தோறும் பழக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.  பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள இநத் கட்சி இன்று தொடங்கியது. இதையடுத்து, கண்காட்சியின் முகப்பு  பலா, அன்னாசிபழங்காளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பழங்களால்  பட்டாம்பூச்சி, மயில், மாட்டுவண்டி உருவங்கள் பழங்களால் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழங்களை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர். பழக்கண்காட்சி 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed