12ந்தேதி மாநில சட்டமன்ற தேர்தல்: சத்தீஸ்கரில் 62 மாவோயிஸ்டு சரண்!

ராய்ப்பூர்:

த்தீஸ்கரில் வரும் 12ந்தேதி மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தற்போது  62 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநில அரசுக்கு  பாராட்டு தெரிவித்துஉள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில்  கடந்த மாதம் இறுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் தூர்தர்ஷன் சேனலின் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 காவலர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.  நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக மாவோயிஸ்டுகள் சார்பில் வருத்தம் தெரிவித்து கடிதம் வெளியானது. மேலும், காவல்துறையினருடன் செய்தியாளர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் சத்திஸ்கர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், பயங்கர வாத நடவடிக்கைகளில் இருந்து   மாவோயிஸ்டுகள் திரும்பி திருந்தி வாழ மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. திருந்தி  விரும்பும் மாவோயிஸ்டுகளுக்கு, புனர்வாழ்வு பணிகளுக்கான ஏற்பாடுகளையும் அரசு செய்து கொடுக்கிறது.  மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்படும் என்று காவல்துறை தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக ஜன்தனா சர்கார் என்ற மாவோயிஸ்ட் அமைப்பின்கீழ் செயல்பட்டு வந்த பஸ்தார் பிராந்தியம் நாராயண்பூர் மாவட்டத்தை  62 பேர் நேற்று காவல்  நிலையத்தில் சரண் அடைந்தனர்.  அவர்களில் 55 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்ததாகவும் ஐஜி விவேகானந்த் சின்கா தெரிவித்துள்ளார்.

ஒரே சமயத்தில் இவ்வளவு  மாவோயிஸ்டுகள் சரண் அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், இது அரசின் சரண்டர் கொள்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி பெற்றும் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாநில முதல்வர், டிஜிபி மற்றும் காவல்துறையினருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 12ம் தேதி மற்றும் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 12ந்தேதி மாநில சட்டமன்ற தேர்தல்: சத்தீஸ்கரில் 62 மாவோயிஸ்டு சரண்!, 62 Naxals surrender in Chhattisgarh
-=-