ஒரே நாளில் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தமிழகம் உள்படசில மாநிலங்களில்தீவிரமாக பரவி வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில்  62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டி உள்ளது. மேலும் நேற்று மட்டும்  1007 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை 10 மணி அளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது,

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 15 ஆயிரத்து 74ஆக அதிகரித் துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 62 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1007  பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 386ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 35 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நாட்டிலேயே அதிக பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்து 96 ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி