டில்லி: 113 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட மூதாட்டி கைது

டில்லி:

டில்லியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 62 வயது மூதாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

டில்லியில் சமூக விரோத கும்பலை கையில் வைத்து கொண்டு பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் பாஸிரான் (வயது 62). இவரது கூட்டாளிகள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் பாஸிரானை போலீசார் தேடி வந்தனர். அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். தேடப்படும் குற்றவாளியாக பாஸிரான் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் டில்லி சங்கம் விகாரில் சொத்து விவகாரம் குறித்து உறவினர்களிடம் பேசுவதற்காக பாஸிரான் வந்தபோது டில்லி குற்றப்பிரிவு போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். இவர் மீது 113 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.