கடத்தப்பட்ட  62 ஆயிரம் பாட்டில்கள்..   போலீசை மிரளவைக்கும் சரக்கு விவகாரம்..

அரியானா மாநிலம் சோனாபட் மாவட்டத்தில் உள்ள முர்த்தல் என்ற இடத்தில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வரிசையாக வந்த சில லாரிகளை ஓரம் கட்டச்சொல்லி, சோதனை நடத்தியபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அத்தனை லாரிகளிலும், பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள்.

மணிக்கணக்கில் எண்ணிப்பார்த்த பிறகு தான் பாட்டில்கள் எண்ணிக்கை தெரியவந்தது.

மொத்தம், 62 ஆயிரத்து 400 பாட்டில்கள்.

நம்ம ஊர் ’டாஸ்மாக்’ கடைகளுக்கு சப்ளை செய்யும் லாரிகளில் கூட இந்த அளவு சரக்கு இருக்குமா? என்பது சந்தேகமே.

இந்த பாட்டில்கள் பஞ்சாப் மாநிலம் தெரபசி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் ’பிளாக் மார்க்கெட்டில்’ விற்பனை செய்யப்படுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

குவியல் குவியலாக மது பாட்டில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே பகுதியில் கடந்த மாதம் 18 ஆம் தேதி 12 ஆயிரம் சரக்கு பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

– ஏழுமலை வெங்கடேசன்