ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா: 40 பேர் பலி

அமராவதி: ஆந்திராவில் இன்று மேலும் 6,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆந்திராவில் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,19,256 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று ஒரே நாளில் 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனால் ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,981 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 54,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 7,084 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 6,58,875 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.