புதுச்சேரியில் இன்று மேலும் 63 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 800ஐ தாண்டியது

புதுச்சேரி:

புதுச்சேரியில் , இன்று  மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 800ஐ தாண்டி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமி அலுவலக ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து, முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துப்பட்டிருந்து.

புதுச்சேரியில் நேற்றைய (ஜூலை 1ந்தேதி) நிலவரப்படி, 739 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 331  பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமான நிலையில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று மேலும் 63 பேர் பாதிப்புக்கு உள்ளானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 802 ஆக அதிகரித்து உள்ளது.

கார்ட்டூன் கேலரி