சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி,  ரூ.25 கோடி மதிப்பீட்டில் 3 நீர்வள திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மேலும்,  ரூ.353 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து,  கல்வித்துறையில் 635 இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் அலுவகம் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

எரிசக்தித் துறையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 துணை மின் நிலையங்களை இன்று (19.09.2020) திறந்து வைத்தேன்

சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தையும், மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் இன்று திறந்து வைத்தேன்.
மதுரை-மாடக்குளம் கண்மாய்க்கு நீர் வழங்கி மதுரை மாநகராட்சி பகுதிகளில் நிலத்தடி நீரை செறிவூட்ட வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கும், திருமங்கலம் பிரதான கால்வாயின் 1-வது கிளை கால்வாயை புனரமைத்தல், சீவலப்பேரி குளத்தின் நடைபாதை அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
பொதுப்பணித்துறையில் 2018-2019 மற்றும் 2019-2020 ம் ஆண்டுகளுக்கான 148 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் அமைச்சுப் பணிகளுக்காக 635 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்று (19.09.2020) பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 7 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினேன்.
தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பால் காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் #connect2020 மாநாட்டில் தமிழ்நாடு இணையப் பாதுகாப்பு கொள்கை 2020, தமிழ்நாடு நம்பிக்கை இணையக்கொள்கை 2020, தமிழ்நாடு பாதுகாப்பு (ம) நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 ஆகியவற்றை வெளியிட்டேன்.