சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலிருந்து ரூ.65 கோடி பறிமுதல்…!

 

சினிமா பைனான்சியர் அன்புசெழியன், பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.

சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீடு அலுவலகங்களில் நடந்த சோதனையில் ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.