கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட 65 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா!

ரிஷிகேஷ்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த கும்பமேளா பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர்களில், 65 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுள் மருத்துவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்ட பின்னரே, அந்தப் பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

கும்பமேளா பணியில், மொத்தமாக 751 சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அவர்களுள், 336 பேர் மருத்துவர்கள் மற்றும் 415 பேர் செவிலியர்கள் மற்றும் துணைநிலை மருத்துவ துறையைச் சார்ந்தவர்கள்.

லட்சக்கணக்கான பேர் கலந்துகொண்ட கும்பமேளா நிகழ்வு, சுமார் 641 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கும் அதிகமான இடத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.