ரூ.65ஆயிரம் கோடி தேவை: ஊரடங்கு எளிதானதுதான், ஆனால் பொருளாதாரம்…? ராகுலுடன் விவாதித்த ரகுராம்ராஜன்

டெல்லி:

ரடங்கு எளிதானதுதான், ஆனால் அது, மேலும் நீட்டிக்கப்பட்டால் பொருளாதாரம் கேள்விக்குறியாகி விடும் என எச்சரித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்,  ஏழைகளுக்கு உணவு வழங்க ரூ.65ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறினார்.

அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்தியாவின் பொருளாதார மந்த நிலை மற்றும் கொரோனா பரவல், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களின் கருத்துக்களையும் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள  பொருளாதார பாதிப்பு  ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் 30 நிமிடங்களுக்கும் மேலாக வீடியோகான்பரன்சிங் வாயிலாக விவாதித்தார்.

அவரிடம் ராகுல்காந்தி சுமார்  30 நிமிடம்  விவாதித்தார். அப்போது இந்திய பொருளாதாரம், ஊரடங்கு, ஏழை மக்கள் பாதிப்பு,  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வேறுபாடு  உள்பட  பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு விளக்கம் பெற்றார்.

ராகுலின் கேள்விக்கு  பதிலளித்த ரகுராம் ராஜன், மக்களை எப்போதும் முடக்கத்திலே வைத்திருப்பது என்பது மிகவும் எளிதானது தான், ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையானததாக இருக்காது. லாக்டவுனை தொடர்ந்து நீட்டிக்காமல் பொருளாதாரத்தை படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான வழியைத் தேட வேண்டும்

லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள  ஏழைகளின் வாழ்வாதாரத்தை காப்பற்றுவதற்கு தற்போது, நமக்கு சுமார் ரூ.65,000 கோடி தேவைப்படலாம். இந்தியாவின் உள்நாட்டுமொத்த உற்பத்தியின் மதிப்பு ரூ200லட்சம் கோடி. இதில் ரூ65 ஆயிரம் கோடிதான் ஒதுக்குவது என்பது  பெரிய தொகை இல்லை.

அதே வேளையில்  ஊரடங்கை தளர்த்துவதில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட்டாக வேண்டும்,  இந்தியா அரசால் மக்களுக்கு  நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இல்லாததால், நாம் இல்லை, அதனால்  படிப்படியாக கட்டுபாடுகளை தளர்த்த வேண்டும்.

ஊரடங்கை  முடிக்க மத்திய அரசு முடிவு செய்தவுடன் முதலில் மக்களின் வாழ்வாதாரத்தை, உயிரைக் காக்க முன்னுரிமை அளிக்க வேண்டும். நாம் மக்களைக் காக்க, பொருளாதாரத்தைக் காக்க மரபுகளை, விதிமுறைகளை மீற வேண்டியது ஏற்படாலம்,

ஆனால்,  நம்முடைய வளங்கள், திறன்கள் அளவாக இருப்பதால் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப்போகிறோம் எவ்வாறு பொளாதாரத்தை நாம் ஒன்றாக பாதுகாக்கப்போகிறோம் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை 3-வது அல்லது 4-வது லாக்டவுன் வந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும்.

மேற்கத்தியநாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானதுதான். ஆதலால், சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்து விடப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

நாம், அமெரிக்கா போன்று  அனைத்திலும் வலிமையான நாடாக இருந்திருந்தால், தினசரி 20 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தியிருக்க வேண்டும், ஆனால், நமம்மால்   25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே நடத்த முடிகிறது. ஆனால் நாளொன்றுக்கு 5 லட்சம் சோதனைகளாவது அவசியம்.

100 சதவீதம் கொரோனா தொற்றை வென்றுவிட்டுதான் பொருளாதாரத்தை திறந்துவிடுவோம் என்ற இலக்கெல்லாம் நம்மிடம் இல்லை.  நாம் பொருளாதாரத்தை திறந்துவிடும் போது ஆங்காங்கே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வரத்தான் செய்வார்கள், அவர்களை தனிமைப்படுத்தி, சிகிச்சையளித்து பொருளாதாரத்தை இயக்க வேண்டும்.

மக்கள் அரசு வேலைவாய்ப்புகளை மட்டும் நம்பியிருக்காமல் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்.

இந்தியா தனது உற்பத்திக்கும், சப்ளைவுக்கும் சர்வதேசஅளவில் நல்ல சந்தை இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளது.  ஆதலால்,நிச்சயம் உலகளவில் ஆர்டர்களை எடுக்க  இந்தியாவால் முடியும்.

இவ்வாறு ரகுராம்ராஜன் கூறினார்.

பின்னர் ரகுராம் ராஜன் ராகுல் காந்தியிடம்   இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ராகுல், இந்தியாவில் ஆழமான சமத்துவமின்மையை இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வித்தியாசமாக தான் பார்க்கிறேன் என்றார்.

“என்னை எரிச்சலூட்டும் விஷயங்களில் ஒன்று சமத்துவமின்மையின் நிலை. இந்தியாவில் நிறைய சமூக மாற்றங்கள் தேவை. வெவ்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஒரு போர்வை தீர்வு இந்தியாவுக்கு வேலை செய்யாது. ஆனால் நமது நிர்வாக முறைமையில் ஒரு கூறு உள்ளது.

நீங்கள் COVID-19 ஐ கட்டுப்படுத்த முடியாது, ஆனால் இது பிரிட்டிஷுக்கு முன்பே இது வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். இது நாம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாகும் “என்று  காந்தி பதிலளித்தார்.

ரகுராம்ராஜன் தற்போது சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ரகுராம் ராஜன், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியில் இருந்தவர்.

கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கை குறித்து வல்லுநர்களின் ஆலோசனையை பெற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் நேர்காணல் இது என்பது குறிப்பிடத்தக்கது.