டில்லி,

பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் 652 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஏற்கனவே ஆபாச இணைய தளங்கள், சிறுவர் சிறுமியர் பற்றிய ஆபாச தளங்கள், பெண்களுக்கு எதிரான ஆபாச இணைய தளங்களை முடக்க கோரி பாராளுமன்றத்தில் பல முறை விவாதிக்கப்பட்டது.

அப்போது, ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது 652 இணையதளங்களை முடக்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நாட்டை அச்சுறுத்தும் வகையிலும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த 652 இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஜூன் 2017  வரை 652 இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில்  83 இணைய தள பக்கங்கள்நீதிமன்ற உத்தரவின் படி முடக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்கள் அடங்கிய இணையதள பக்கங்கள் அதிக அளவில் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் இயங்கி வந்த இணையதள பக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பின்னர் முடக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.