சென்னை:

திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினின் 65வது பிறந்தநாளையொட்டி, அண்ணா நினைவிடம், பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இன்று பிறந்தநாள் காணும் மு.க.ஸ்டாலின் காலை எழுந்ததும், தனது தந்தையான கருணாநிதியுடன் ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து அண்ணா நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.

அதைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவரை திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, பூங்குன்றன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலினுடன்  தி.மு.க. முதன்மைச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஸ்டாலின் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவருக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஸ்டாலின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டி வருகின்றனர். பல மாவட்டங்க ளில் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளித்தும், ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.