16க்கு 66 வயது லவ்லெட்டர்.. போக்சோ சட்டத்தில் சிக்கிய பெருசு.

16க்கு 66 வயது லவ்லெட்டர்.. போக்சோ சட்டத்தில் சிக்கிய பெருசு.

கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவர் 66 வயது முகமது பீர் பாஷா. அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் ஆசை ஏற்பட்டுள்ளது இவருக்கு.

அதே பகுதி என்பதால் அசசிறுமியை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு இருந்துள்ளது. இதனால் சபலம் அதிகமான முகமது ஒரு கடிதத்தில் “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. உனக்கு ஓகே வா” என்று எழுதி சிறுமியிடம் கொடுத்துள்ளார். அந்த லெட்டரை வாங்கிய சிறுமி தனது பெற்றோரிடம் எடுத்துச்சென்று கொடுத்து நடந்ததை விவரித்துள்ளார். அவர்கள் தங்கள் உறவினர்களை அழைத்து விவரத்தைக் கூற, ஆத்திரமடைந்த அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முகமது பாஷாவை கூப்பிட்டு கண்டித்துள்ளனர்.

ஆனால் முகமது பாஷாவோ அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் திரும்பத்திரும்ப அச்சிறுமியை பார்க்கும் போதெல்லாம் தான் எழுதிய கடிதத்திற்கு என்ன பதில் என்று கேட்டு தொத்தரவு செய்துள்ளார். இவருக்கு பயந்தே அச்சிறுமி வீட்டைவிட்டுக்கூட வெளியே வராமல் பயத்தில் இருந்துள்ளார்.

இதையறிந்த அவர் பெற்றோர் இதற்கு மேல் பொறுமையுடன் இருப்பது நல்லதல்ல என்று முடிவு செய்து அப்பகுதி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக விசாரணை நடத்தியதில் முகமது பாஷா தவறு செய்தது உறுதியாகிவிட அவரை போக்‌சா சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

வயதிற்கு மீறிய அநாகரீகச் செயலினால் இப்போது முகமது பாஷா கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

– லெட்சுமி பிரியா

கார்ட்டூன் கேலரி