டெல்லி: நாடு முழுவதும்  கடந்த 24 மணி நேரத்தில் 68,898 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றா வது இடத்தில் உள்ள நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த 17 நாட்களாக அதிகமாக பதிவாகி வருவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு 29 லட்சத்தை  தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு  29,05,824 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 21,58,947  லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைபவர்களின் விகித மானது 74.30 சதவீதமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 983 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 54,849 ஆக அதிகரித்துள்ளது  உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது.

 தற்போதைய நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,92,028 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவைவிட பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இதுவரை 55.73 லட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். பிரேசிலில் 35.01 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை விட 6 லட்சம் மட்டுமே அதிகமாகும்.

மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 61 சதவீத புதிய பாதிப்புகளும், 75 சதவீத உயிரிழப்பும் ஏற்பட்டு உள்ளது.

நாட்டில் பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 14,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,43,289 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர்.

இந்தியாவில் இதுவரை 3.3 கோடி மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று ஒரே நாளில் 8.05 லட்சம் மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.