தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மாலை 6 மணி வரை 69.55% வாக்குப்பதிவு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை:

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் வேலூர் தவிர இதர 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 6 மணி நிலவரப்படி, 69.55% வாக்குகள் பதிவானதாக சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது 70 முதல் 72 % வரை உயரலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மதுரையில் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடியும்.
வடசென்னையில் 61.4%,மத்திய சென்னையில் 57%, தென் சென்னையில் 58% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
அரூர் சட்டப்பேரவை தேர்தலில் 86% வாக்குப் பதிவு நடந்துள்ளது.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 78% வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில் 71.62% வாக்குப் பதிவு நடந்துள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.07% வாக்குப் பதிவு நடந்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வாக்குப்பதிவு

நாடு முழுவதும் நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 76.07% வாக்குப் பதிவு நடந்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவில் பெருமளவு டடாக்குகள் பதிவாகின.

புதுச்சேரி

புதுச்சேரி மக்களவை தொகுதியில் 78% வாக்குகள் பதிவாயின. மணிப்பூரில் 75% பதிவானது. ஸ்ரீநகரில் 12.3%, காஷ்மீர் மாநிலத்தின் பட்காமில் 17.1% வாக்குகளும் பதிவாயின. காஷ்மீரில் தேர்தலை புறக்கணிக்குமாறு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளில் வன்முறை, சாலை மறியல் குண்டுவீச்சு, போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தன.
கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர்.